ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக கட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதானார்.
இதன்பின்னர் துணை பொதுச்செயலாளராக பதவியேற்ற டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால் கட்சியினை வழிநடத்த அதிகாரப்பூர்வமாக யாரும் இல்லை என்னும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு தீர்வு காண்பதற்காக நேற்று நடத்தப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் 16 மாவட்ட செயலாளர்களும் இன்று நடந்த கூட்டத்தில் 17 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
நேற்றும் இன்றும் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்ட புதிய ஆவணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை போன்று திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளை (27.4.2017) மூன்றாவது நாளாக நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர் கூட்டத்தில் 17 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு குறித்த ஆவணத்தில் கையெழுத்திட உள்ளனராம்.
இந்த ஆவணத்தினால் கட்சி, ஆட்சி இரண்டும் எடப்பாடி கைக்கு செல்வதால் இதனை உறுதிப்படுத்துவதற்காக குறித்த ஆவணங்களை தேர்தல் கமிஷனிடம் சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.