அதிமுக-வைச்சேர்ந்த 28 எம்.எல்.ஏக்கள் திடீரென புதிய கோஷ்டியாக உருவெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கோஷ்டிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பேச்சுவார்த்தைக்கு தயாராகிவிட்டனர்.
இருவரும் சசிகலா, தினகரன் இல்லாத அதிமுகவை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் அதிமுகவின் 28 எம்.எல்.ஏக்கள் இணைந்து புதிய கோஷ்டியாக உருவெடுத்துள்ளனர்
இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றி ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இணையும் நிலையில் தங்களது அணியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் அந்த 28 எம்.எல்.ஏக்களின் புதிய கோஷ்ட்டி கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில் தமிழகத்தில் ஆட்சி நீடிக்க முடியாத அளவுக்கு குடைச்சலை கொடுக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.