அதிகாலை வேளையில் தனியாக அலைந்து திரிந்த சிறுமி.
கனடா-ரொறொன்ரொ பெற்றோர் இருவர் படுக்கையில் இருந்து எழுந்து பார்த்த போது தங்களது சிறு பெண் குழந்தையை காணாததால் பரபரப்படைந்து பொலிசாரை தொடர்பு கொண்ட போது சிறுமி சந்தோசமாக பொலிஸ் நிலையத்தில் கார்ட்டூன்கள் பார்த்து கொண்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட மூன்று வயது மதிக்கத்தக்க இச்சிறுமி அதிகாலையில் தனியாக நடந்து சென்று மளிகைகடை ஒன்றிற்கு சென்றுள்ளாள்.
இவள் தனது ஆடைகளை அணிந்து மழைக்கால காலணிகளையும் அணிந்து வெளிக்கதவையும் பூட்டி விட்டு வீட்டில் இருந்து கிட்டத்தட்ட ஒரு தொகுதி தூரம் நடந்து சென்றுள்ளாள் என பொலிசார் கூறினர்.
அதிகாலை புறோட்வியு அவெனியு வெஸ்ட்வூட் அவெனியுவில் புறோட்வியுவில் அமைந்துள்ள சோபிஸ் கடை ஊழியர் ஒருவர் அதிகாலை 2.20 மணியளவில் சிறுமியை கண்டு பொலிசாரை அழைத்தார்.
பொலிஸ் நிலையத்திற்கு பொலிசார் சிறுமியை அழைத்து வந்தனர்.அங்கு அவள் கார்ட்டூன்கள் பார்த்து கொண்டிருக்க அதிகாரிகள் அயலவர்களின் வீட்டு கதவுகளை தட்டியும் உள்ஊர் பெண்கள் தங்குமிடங்களிலும் வீதகளில் சென்றவர்களிடமும் இவளின் பெற்றோரை தேடினர்.
அதிகாலை 5.15மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்த போது தங்கள் மகளை காணவில்லை என அறிந்தனர்.உடனடியாக பொலிசாரை அழைத்து சிறுமியுடன் சேர்ந்து கொண்டனர்.
சிறுமி சிறிதளவேனும் கலக்கமடையவில்லை என பொலிசார் கூறினர்.
இச்சம்பவம் மகிழ்ச்சியான முடிவை கொண்டிருந்த போதிலும் பெற்றோர்கள் வெளிக்கதவுகளிற்கு சிறுவர்கள் அடைய முடியாதவாறு பூட்டுக்களை அல்லது பாதுகாப்பு சங்கிலியை இளம் சிறார்களிற்கு எட்ட முடியாதவாறு போடவேண்டும் என நினைவு படுத்துகின்றனர்.