கனடா நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Coquitlam நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நகரில் 30 வயதான தாயார் ஒருவர் தனது 3 மற்றும் 9 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை நேரத்தில் தாயார் ஒரு வாகனத்திலும், இரண்டு பிள்ளைகள் மற்றொரு வாகனத்திலும் வெளியே பயணம் செய்துள்ளனர்.
நெடுஞ்சாலையில் பயணம் செய்தபோது இரண்டு வாகனங்களும் அதிவேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, சாலையின் எதிரே வந்த மற்றொரு வாகனம் இரண்டு வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இவ்விபத்தில் தாயார் மற்றும் இரண்டு பிள்ளைகளும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
விபத்துக் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்த மற்ற 5 பேரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
விபத்திற்கு போதை பழக்கம் காரணம் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து நிகழ்ந்ததை தொடர்ந்து நகர மேயரான Richard Stewart என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
இதுக் குறித்து மேயர் பேசியபோது, விபத்தில் தாயார் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்திற்கான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு போதுமான உதவிகள் செய்யப்படும் என மேயர் தெரிவித்துள்ளார்.