அதிகமான மெக்சிக்கன் குடிவரவாளர்களை கனடா தடுத்துள்ளது.
கனடா எல்லைபுற சேவைகள் ஏஜன்சி 2017ன் முதல் இரண்டு மாதங்களில் அதிக மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த குடிவரவாளர்களை தடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் கூற்று பிரகாரம் 444 மெக்சிக்கர்களை கனடா தடுத்துள்ளதாக மார்ச் 9 வரையிலான புள்ளிவிபரவியல் தெரிவிக்கின்றதாக அறியப்படுகின்றது.
இந்த எண்ணிக்கை 2016ஐ விட அதிகமாகும். 2016ல் 410 மெக்சிக்கர்கள் கனடா எல்லைபுற அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளனர்.
கனடிய மத்திய அரசாங்கம் டிசம்பரில் மெக்சிக்கோ நாட்டவர்களிற்கான விசா தேவையை அகற்றியதை தொடர்ந்து உடனடியாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. ஜனவரி மாதத்தில் மட்டும் 70 மெக்சிக்கோ நாட்டவர்கள் கனடாவில அகதி கோரிக்கையை செய்துள்ளனர் என கூறப்படுகின்றது.
அமெரிக்காவிற்கான தங்களது குறிக்கோளை மெக்சிக்கர்கள் கனடா நோக்கி திருப்பியுள்ளனர். இந்நிலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவணமற்ற புலம் பெயர்ந்தோர் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்க எடுத்த அதிரடி முடிவின் விளைவாகும். அமெரிக்காவிற்குள் நுழையும் குடிவரவாளர்களில் அரைப்பங்கானவர்கள் மெக்சிக்கோ நாட்டவர்ளே.
கனடாவில் இந்நிலைமையை தனது திணைக்களம் கண்காணிக்கும் என கனடிய குடிவரவு மற்றும் அகதிகள் அமைச்சர் அகமட் ஹ_சைன் தெரிவித்துள்ளார்.
இது குறித்த தீர்மானங்களை வரையறை செய்வதற்கு அல்லது ஊகிப்பதற்கு ஏற்ற எதிர்கால கொள்கைகளை பின்பற்றுவதற்கு இச்சமயம் உகந்ததல்ல என அமைச்சரது பேச்சாளர் கமிலி எட்வேட் தெரிவித்ததாக அறியப்படுகின்றது.
வெளிநாட்டவர்கள் பொது மக்களிற்கு ஆபத்தை ஏற்படுத்துவர் என நம்பபடும் பட்சத்தில் அவர்களை கனடா எல்லைபுற ஏஜன்சி தடுக்கலாம்-அவர்களது அடையாளம் தெளிவாக இல்லாத காரணங்களால்.
2012-ல் மிக அதிக அளவிலான மெக்சிக்கோ நாட்டவர்கள்-667பேர்கள் வரை-எல்லைபுற சேவைகள் அதிகாரிகளினால் தடுக்கப்பட்டனர்.
மெக்சிக்கர்களிற்கான விசா அகற்றப்பட்டமை கனடாவிற்கு 10 வருடங்களில் 262 மில்லியன் டொலர்கள் செலவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.