அதிகமாக மனங்களை கவர்ந்த நடிகைகள் இவர்களா? ஸ்பெஷல் பார்வை
தமிழ் சினிமாவின் மீது இன்று உலக சினிமாவின் பார்வை திரும்பியுள்ளது. தமிழ் திரைத்துரையை சேர்ந்த கலைஞர்கள் இன்று உலக சாதனை புரிந்துவருகிறார்கள்.
நடிகைகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை எனலாம். ஆம் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அங்கிருந்து இங்கு வந்து சாதிக்கும் நடிகைகள் தான் அதிகம்.
அப்படியாக பார்க்கும் போது கடந்த 2016 ன் முடிவில் நயன்தாரா, திரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் அதிகமாக ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார்கள்.
இவர்களை பற்றிய ஒரு பார்வை:-
நயன்தாரா
இவர் நயன்தாரா சிம்புவுடன் இது நம்ம ஆளு, விக்ரமுடன் இருமுகன், ஜீவாவுடன் திருநாள், கார்த்தியுடன் காஷ்மோரா போன்ற 4 படங்களில் நடித்துள்ளார்.
இதில் இது நம்ம ஆளு, காஷ்மோரா, இருமுகன் ஆகியன அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
இருமுகன் வெற்றியடைந்தாலும், திருநாள், காஷ்மோரா படங்கள் வெற்றி பெறவில்லை.
சமந்தா
கோலிவுட், டோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் சமந்தா 2016 தமிழில் சூர்யாவுடன் 24, விஜயுடன் தெறி என 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இதில் தெறி படம் மட்டுமே சூப்பர் ஹிட்டானது.
24 படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தாலும் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த படத்தில் சூர்யா, சமந்தா ஜோடி பலராலும் ரசிக்கப்பட்டது.
திரிஷா
நயன்தாராவுக்கு இணையாக இருக்கும் திரிஷா அரண்மனை 2, நாயகி படங்களில் பேயாக நடித்திருந்தாலும், ஏன் திரிஷா இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்கிறார், எப்போதும் போல டூயட் பாடலாமே என ரசிகர்கள் கமெண்ட் அடித்தனர்.
தனுசுடன் நடித்த கொடி படத்தின் மூலம் வெற்றியை தட்டிச்சென்றதுடன் அரசியல்வாதியாக நடித்து அந்த 2 படங்களின் மூலம் இழந்த பெயரை கொடியில் பெற்றார்.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்க்கு இப்போது மார்கெட்டில் நல்ல மவுசு தான். சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ என 2 படங்களில் நடித்து ஹிட் கொடுத்து சாதனை செய்தார்.
ரஜினிமுருகன் ஜோடிக்கு வரவேற்பு அதிகமானதால் ரெமோவில் நடித்து நடிகர்களின் மனதில் இடம் பெற்றார் என்றே தான் சொல்லவேண்டும்.
ஆயினும் தனுஷுடன் நடித்த தொடரியில் நடிப்பு சிறப்பாக இருந்தாலும் தோல்வியானது.