அடையாள அட்டைகள், கடன் அட்டைகள் குறித்த மோசடியில்ரொறொன்ரோ மனிதனுக்கு சிறைத்தண்டனை.
கனடா-ரொறொன்ரோ மனிதன் ஒருவர் 2-மில்லியன் டொலர்கள் கடன் அட்டைகள் திருட்டு மற்றும் அடையாள மோசடி திட்டத்தில் ஈடுபட்டிருந்த குற்றத்திற்காக வெள்ளிக்கிழமை நான்கு வருடங்கள் சிறைதண்டனை பெற்றுள்ளார்.
ஒன்ராறியோ மாகாண பொலிசார் 2013மார்ச் மாதம் ரொறொன்ரோவை சேர்ந்த 33வயது மனிதன் ஒருவரும் மற்றொருவரும் பார்ரி என்ற இடத்தில் மேப்பிள் வியு டிரைவில் திருடப்பட்ட வாகனம் ஒன்றில் போவதை அறிந்துள்ளனர்.
இருவரையும் கைது செய்த பொலிசார் பின்னர் 2,500 போலி மற்றும் களவாடப்பட்ட கடன் அட்டை இலக்கங்கள், போலி ஒன்ராறியோ வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் ஒரு போலி ஒன்ராறியோ ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் தயாரிக்க உதவும் அடையாள முத்திரை போன்றனவற்றை பொலிசார் கண்டு பிடித்தனர்.
அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் றஜீர் ஹென்ரி பாலேந்திரா 33-வயது 5,000 டொலரகளிற்கும் மேலான தொகை மோசடி சதி குற்றம் கள்ள தரவு சட்ட விரோத உடமைகளை வைத்திருந்தமை போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.
இத்திட்டங்களினால் யு.எஸ்.மற்றும் கனடாவிலுள்ள வங்கிகளிற்கு 2மில்லியன் டொலர்களிற்கும் மேலான தொகை செலவாகியதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிகிழமை நீதிபதி சுசன் ஹீலெ பாலேந்திராவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.
412 total views, 412 views today
– See more at: http://www.canadamirror.com/canada/68695.html#sthash.hqsOTgE6.dpuf