அடேடே..! உலக ரசிகர்களை நெகிழ வைத்த வருங்கால மெஸ்ஸி!
!
Junior Soccer World Challenge தொடரின் இறுதிப் போட்டியில் ஜூனியர் (19 வயது) பார்சிலோனா அணி, ஜப்பானை சேர்ந்த ஒமியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இதனால் மனமுடைந்து போன ஒமியா அணியின் சிறுவர்கள் அனைவரும் அழ ஆரம்பித்தனர். இதனை பார்த்த ஜூனியர் பார்சிலோனா அணியின் தலைவர் அடிரியா அனைவரையும் கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.
இதைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் எதிரணியை கட்டியணைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
ஜூனியர் பார்சிலோ அணியின் இந்த செயல் உலக கால்பந்து ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
கடந்த ஆண்டு லா லிகா தொடரில் பார்சிலோ, 3-1 என ஜூவன்டஸ் அணியை வீழ்த்திய போது, ஜூவண்டஸ் வீரர் பிர்லோ கதறி அழுதார்.
அப்போது பார்சிலோனா அணியின் தலைவர் சேவி பிர்லோவை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்தை, சிறுவர்களின் இந்த செயல் நினைவுப்படுத்துவதாக ரசிகர்கள் நெகிழ்ந்து வருகின்றனர்.