ப்ரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘நிமிர்’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படம் விரைவில் வெளியாகிறது. இந்தப்படத்தையடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஜனவரி) 19-ஆம் தேதி துவங்கவிருக்கிறது.
இந்நிலையில் விஷால் நடிப்பில் ‘இரும்புத்திரை’ என்ற படத்தை இயக்கி வரும் மித்ரன், இந்த படம் முடிந்ததும் உதயநிதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’, ‘ரிச்சி’ முதலான படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை நடிக்கிறார். மித்ரன் சொன்ன ஒன் லைன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு பிடித்துவிட உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்