அடுத்தடுத்து அதிரடி சதம்: முதல் நாள் ஆட்டத்தில் இலங்கையை கதறடித்த தென் ஆப்பிரிக்கா
இலங்கை- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று ஜோகன்ஸ்பர்க்கில் தொடங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இதன் படி தொடக்க வீரர்களாக ஸ்டீபன் குக், டீன் எல்கர் களமிறங்கினார்கள். குக் 10 ஓட்டங்களிலும், எல்கர் 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் ஜோடி சேர்ந்த ஹசிம் அம்லா, டுமினி நிதானமாக விளையாட ஆரம்பித்தனர். இந்த ஜோடியை பிரிக்க இலங்கை பந்துவீச்சாளர்கள் செய்த வியூகம் ஏதும் பலனளிக்கவில்லை.
இதனால் இருவரும் சதம் விளாசினார்கள். டுமினி 221 பந்தில் 19 பவுண்டரி உட்பட 155 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் தென்ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 338 ஓட்டங்கள் எடுத்தது. அம்லா 125 ஓட்டங்களுடனும், ஓலிவீர் ஓட்டங்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணி சார்பில், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும், மேத்யூஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.