மும்பையைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அடா சர்மா. சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கும், பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நாயகியாகவும் நடித்தவர். தற்போது, ‘கமாண்டோ 3, பைபாஸ் ரோடு, மேன் டூ மேன்’ ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். அவருடைய டுவிட்டரில் அடிக்கடி ஏதாவது ஒன்றைப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். தற்போது அவருடைய டுவிட்டரில் ‘தேவை’ என்று குறிப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “வெங்காயம் சாப்பிடாதவ மாப்பிள்ளை தேவை. சாதி, நிறம், ஷு சைஸ், விசா, நீச்சல் திறமைகள், தோள் வலிமை அளவு, இன்ஸ்டாகிராம் பாலோயர்கள், சோதிடம் ஆகிய தகுதிகள் தேவையில்லை. சிரித்த முகத்துடன் 3 வேளை சமைக்க வேண்டும். வழக்கமாக ஷேவ் செய்ய வேண்டும். இந்திய பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும். தினமும் 5 லிட்டர் தண்ணீர் அருந்த வண்டும். வீட்டிலோ, வெளியிலோ மது அருந்தக் கூடாது. இந்திய மொழியில் உள்ள அனைத்து மொழிப் படங்களையும் மதிக்க வேண்டும், அவற்றை உற்சாகமாகப் பார்க்க வேண்டும்,” என்ற நிபந்தனைகளையும் தெரிவித்துள்ளார்.
அப்படி தகுதி உள்ள யாராவது விண்ணப்பித்தால் என்ன செய்வேன் என்பதை அடா சர்மா சொல்லவில்லை.