நடிகர் அஜித்தின் 46 வது பிறந்தநாளை இன்று பல பகுதிகளில் ரசிகர்கள் கொண்டாடினர். சென்னையில் உள்ள அஜித் ரசிகர்கள் இன்று ஒரு பெரிய விழாவே நடத்தினர். இதில் நோட் புக் வழங்குதல், மரக்கன்று நடுதல், ரத்ததானம் என நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சாந்தனு வந்திருந்தார். அவர் பேசியபோது நான் விஜய் ரசிகர் என்பதை விட அவர் என்னுடைய அண்ணன் என்றே சொல்லலாம். அப்படியான உறவுதான் இருந்தது.
ஆனால் தலயிடம் பழக அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருமுறை தான் அவரை நேரில் பார்த்துள்ளேன்.
அஜித்தையும் எனக்கு பிடிக்கும் ஏன் தெரியுமா, அவர் தன்னுடைய சொந்த முயற்சியில், உழைப்பில் இவ்வளவு ரசிகர்களை சேர்த்துள்ளார் என்பது தான்.
அவருடை ரசிகர்கள் அவரைப்போல எல்லோருக்கும் மதிப்பு கொடுக்கிறார்கள். இது எல்லாமே அவருக்கு தான் போய்ச்சேரும். அவருக்கு என் குடும்பத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் என சாந்தனு பேசினார்.
விழாவில் முக்கியகட்டமாக சாந்தனுவே கேக் வெட்டினார்.