அஜித்துடன் இணைந்த விக்ரம் பிரபு, அஞ்சலி
ஏதாவது ஒரு ஸ்பெஷல் தினம் வந்துவிட்டால் வரிசையாக பல படங்களின் பூஜையோ, முதல் நாள் படப்பிடிப்பு என தொடங்குவார்கள்.
அப்படி இன்று ஜுலை 6ம் தேதி வரிசையாக மூன்று சிறப்பான விஷயங்கள் நடைபெற்றது. அதில் ஒன்று ரசிகர்கள் நீண்ட நாள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தல அஜித்தின் 57வது படத்தின் பூஜை. இந்த விழாவில் இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் சுரேஷ் சந்திரா என பலர் கலந்து கொண்டனர்.
ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த விக்ரம் பிரபு இன்று தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார். First Artist என்று தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயரிட்டுள்ளார், அதோடு நெருப்புடா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார்.
அஞ்சலி, ஜெய்யுடன் 5 வருடம் கழித்து இணையும் புதிய படத்தின் சூட்டிங் இன்று தொடங்கியுள்ளது. இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.