அஜித்தின் விவேகம் படத்துக்கு எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ரசிகர்களிடையே. படத்தின் ஒவ்வொரு புகைப்படங்களும் படம் வேறலெவலில் தான் தயாராகி வருகிறது என்று ரசிகர்களையே நம்ப வைக்கிறது.
இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கும் இப்படத்தின் டீஸர் வரும் மே 11ம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த டீஸரை வைத்து பல சாதனைகளை புரிய ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் திரையிடப்பட இருக்கும் இந்த படம் ரூ. 300 கோடி வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக கூறுகிறார் மூத்த விநியோகஸ்தர்.
அஜித் நடித்த படங்களில் அதிக அளவில் வியாபாரம் பேசப்படும் படம் இதுதான்.