அங்கே சொதப்பிய சங்கக்காரா.. இங்கே வெளுத்து வாங்கிய ஜெயவர்த்தனே
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான ஜெயவர்த்தனே, சங்கக்காரா இருவரும் வெளிநாட்டில் நடக்கும் டி20 லீக் போட்டியில் விளையாடி வருகின்றனர்.
சங்கக்காரா அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 போட்டியிலும், ஜெயவர்த்தனே நியூசிலாந்தில் நடக்கும் சூப்பர் ஸ்மாஷ் டி20 போட்டியிலும் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் பிக் பாஷ் டி20 போட்டியில் நேற்று நடந்த போட்டியில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய ஹொபர்ட் ஹரிகேன்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்கள் சேர்த்தது.
சங்கக்காரா (15) சொதப்பினார். அணித்தலைவர் டிம் பெர்னி (91), ஜார்ஜ் பெய்லி (74) அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தனர்.
பின்னர் விளையாடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தொடக்க வரிசை வீரர்கள் அதிரடியால் 17.4 ஓவரிலே 3 விக்கெட் மட்டும் இழந்து 191 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
குயின்லி 75 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 58 ஓட்டங்களும் ரைட் 48 ஓட்டங்களும் சேர்த்தனர்.
அதேபோல் நியூசிலாந்தில் நடந்த சூப்பர் ஸ்மாஷ் டி20 போட்டியில் வெல்லிங்டன், சென்ட்ரல் டிஸ்டிக்ஸ் அணிகள் மோதியது.
இந்தப் போட்டியில் வெல்லிங்டன் அணியை வீழ்த்தி சென்ட்ரல் டிஸ்டிக்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
ஜெயவர்த்தனே 21 பந்தில் 40 ஓட்டங்களும், வொர்கர் 32 ஓட்டங்களும் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.