கலேயின் காட்டு முகாம் கலைக்கப்பட்டாலும், அங்கு மீண்டும் சென்று தங்கியிருந்து பிரித்தானியா நோக்கிச் செல்ல முயலும் அகதிகளின் மீது, பிரான்சின் காவற்துறையினர், ஜோந்தார்மினர் மற்றும் கலவரமடக்கும் காவற்துறையினர் (CRS), மிகவும் அதீதமான வன்முறைகளைப் பிரயோகிப்பதாக, பல தொண்டு நிறுவனங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளன. முக்கியமாக இவர்களின் மீது, வேண்டுமென்றே அதிகமான கண்ணீர்ப்புகைத் தெளிப்பான் தாக்குதல்கள் (gaz lacrymogènes) நடாத்தப்படுவதாக, இந்த அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
பல ஆதாரங்களுடன் இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தொண்டு நிறுவனங்கள் வழங்கியிருக்கும் நிலையில், அகதிகள் மீது காவற்துறையினர் வன்முறை மேற்கொள்வவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லையென, பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரார் கொலோம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கும் ஒரு படி மேலே போய், மனித உரிமைகளின் கண்காணிப்பகமான Human Rights Watch,இன் குற்றச்சாட்டையும் மறுத்த உள்துறை அமைச்சர், காவற்துறையினர் மற்றும் ஜோந்தார்மினரிடம் கண்ணீர்ப்புகைத் தெளிப்பான்களே இல்லை என மறுத்துள்ளார்.
ஆனால் நேரடிப் புகைப்பட ஆதாரங்கள் மிகத் தெளிவாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.