வீடற்றவர்கள் தங்கள் பொருட்களை வைப்பதற்காக, தெருக்களில் பாதுகாப்பான பெட்டகங்களை வைக்கும் முயற்சி ருவான் (Rouen) நகரத்தில் முதல் முறையாகப் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீடற்றவர்கள் தங்கள் பொருட்களை வைப்பதற்கான பெட்டகங்கள் அமைக்கும் முயற்சியினைத் தாங்கள் மேற்கொண்டுள்ளதாக, ருவான் நகரத்தின் துணை நகரபிதாவும், இந்தச் சகோதரத்துவ ஒற்றுமை முயற்சியின் பொறுப்பாளருமாகிய Caroline Dutarte தெரிவித்துள்ளார்.
பிரான்சில் முதன் முதலாக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியானது, மக்களை வீதியிலேயே வாழவைப்பதற்காக அல்ல, ஆனால் அப்படி வாழ்பவர்களின் வாழ்வை இலகுவாக்கவதற்காகவே மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது எனவும், பல தொண்டு நிறுவனங்களின் ஆதரவும், அங்கீகாரமும் இதற்குக் கிடைத்துள்ளதாகவும், துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியானது போர்த்துக்கலின் லிஸ்பொன் நகரில் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.