விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு எதிர்ப்புக்களும், ஆதரவுகளும் குவிந்து வருகின்றன. இப்படத்திற்கு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்களால் விஜய் மீது மதுரையில் போலீஸ் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மெர்சல் சர்ச்சை குறித்து விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். இதில், விஜய் ஒரு தலைவராக உருவாகி, அவரை நம்பியுள்ளவர்களுக்கு மாற்றத்தை தர வேண்டும். நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம். நடிகர் விஜய் ஒரு காந்தியவாதி. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அரசியல் பேசவில்லை.
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். அரசியலுக்கு வருவது குறித்து விஜய் தான் முடிவெடுக்க வேண்டும். படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பாளர் சம்மதம் தெரிவித்துள்ளார். சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.