திருகோணமலையில் விகாராதிபதியை தாக்கிவிட்டு அவரது ஆடைகளை திருடிச் சென்ற மூவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இவ்வாறு உத்தவிட்டுள்ளார்.
திருகோணமலை, சீனக்குடா, நான்காம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 34, 24 மற்றும் 27 வயதுடைய இளைஞர்களே சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் மூவரும் இணைந்து நான்காம் கட்டைப் பகுதியிலுள்ள பௌத்த விகாரையொன்றின் விகாராதிபதியை தாக்கி விட்டு அவரின் அறைக்குச் சென்று ஆடைகள் மற்றும் இதர பொருட்களையும் திருடிச் சென்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டுக்கமைய நேற்று -09- அதிகாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையிலேயே அவர்கள் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.