டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் கொரியாவைச் சேர்ந்த 37 வயது மூத்த வீரர் லீ ஹியூனை இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த் 25 நிமிடங்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
தன்னை விட 12 வயது மூத்தவரான லீ ஹியூன் என்பவரை 21-10, 21-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் ஆனார் ஸ்ரீகாந்த். இந்த ஆட்டம் 25 நிமிடங்களே நடைபெற்றது.
சனிக்கிழமையன்று நடந்த அரையிறுதியில் லீ ஹியூன் உலக நம்பர் 2 வீரர் சன் வான் ஹோ என்பவரை வீழ்த்திய ஆட்டத்தில் பத்தில் ஒரு பங்கைக் கூட இறுதிப் போட்டியில் லீ ஹியூனால் ஆட முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.
ஸ்ரீகாந்தின் லாப் ஷாட்கள், துல்லியமான ஸ்மாஷ்களுக்கு மூத்த வீரரிடம் பதில் இல்லை