இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் மன்னார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஏ.சூசைதாசன் தனது 84ஆவது வயதில் நேற்றுக் காலமானார்.
மன்னார், வங்காலையைச் சொந்த இடமாகக் கொண்ட சூசைதாசன் 1977ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் மன்னாரில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்குத் தெரிவானார்.
பின்னர் தனிநாட்டுச் சட்ட வரைவு 1983ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட போது அதைக் கண்டித்து அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகியபோது இவரும் பதவி விலகியிருந்தார்.
1933 ஆம் ஆண்டில் பிறந்த இவர் நோய்வாய்ப்பட்டு அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுக் காலமானார்.