சின்னத்திரையில் வெளியான நாகினி(ஹிந்தி தொடரின் தமிழ் பதிப்பு) சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மவுனி ராய். இவர் இப்போது வெள்ளித்திரையில் கால்பதித்து உள்ளார். முதல்படமாக அக்ஷ்ய் குமாரின் கோல்டு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். முதல்படம் ரிலீஸாகும் முன்பே இன்னொரு படத்தை கைப்பற்றி உள்ளார். அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகும் பிரம்மாஸ்த்ரா படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், ஆலியா பட் ஆகியோர் முன்னணி ரோலில் நடிக்க உள்ளனர். இப்படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும், தர்மா புரொடக்ஷ்ன்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.