மட்டக்களப்பு-களுவாஞ்க்சிகுடி, களுதாவளைப் பகுதியில் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணொருவர் உயிரிந்துள்ளாரென, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 27 வயதுடைய அகிலேஸ்வரன் புஸ்ப்பராணி என்பவரே, இன்று காலை மர்மமான முறையில் உயிரிந்துள்ளாரென, தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் குழந்தையின் பலத்த அழுகுரலை அவதானித்த சிலர் , உள்ளே சென்று பார்த்தவுடன் குறித்த குழந்தையின் தாய் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இது குறித்து பொதுமக்கள், பொலிஸாருக்கு வழங்கி தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.