ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் தேர்தலில் ஏனைய கட்சிகளுடன் போட்டியிடுவது தொடர்பில், ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் தற்போழுது நடைபெற்று வருவதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதேச சபை தேர்தலில் அரசியல் கட்சி ஒன்றுக்கு வழங்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் தற்பொழுது கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மகாஜன எக்சத் பெரமுனா, தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 18 அரசியல் கட்சிகள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனயுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த கலந்துரையாடல்கள் முடிவடைந்த பின்னர் அணைந்து கட்சிகளுடனும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாகவும் கட்சி தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.