பிற மதங்களைச் சேர்ந்தவர்களின் கடைகளில் தீபாவளிப் பண்டிகைக்கான பொருட்களை வாங்க வேண்டாம் என இந்து தமிழர்களைக் கோரும் வகையிலான சுவரொட்டிகளை வவுனியாவில் சிவசேனா எனும் பெயரிலான அமைப்பு வெளியிட்டுள்ளது.
இன ரீதியான பிரச்சினையை உருவாக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இச்சுவரொட்டிகளால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்துத் தமிழ் வர்த்தகர்களே உசாராகுங்கள் என சிவசேனா அமைப்பினரால் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.