பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாசுக்கு உலக அளவில் ரசிகர்கள் உருவாகி விட்டனர். பெண் ரசிகைகள் அதிகரித்து உள்ளனர். இந்த நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் பிரபாஸின் ரசிகையாம். நேற்று ஐதராபாத்தில் சாஹோ படப்பிடிப்பு தளத்தில் இருந்த பிரபாஸை சந்தித்துள்ளார் சாய்னா. இந்த மகிழ்ச்சியான நிகழ்வை தனது டுவிட்டரில் போட்டோவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் சாய்னா நேவால்.