பிரபல கால்பந்து வீரர்கள் 4 பேரை படுகொலை செய்த ஐ.எஸ்: உளவு பார்த்ததாக புகார்
சிரியாவின் பிரபல கால்பந்து அணியில் சிறந்து விளங்கும் 4 வீரர்களை உளவு பார்த்ததாக கூறி கடத்திச் சென்று ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் சமீபத்தில் படுகொலை செய்த 5 நபர்களில் 4 பேர் சிரியாவில் பிரபல கால்பந்து அணிக்காக விளையாடும் வீரர்கள் என தெரிய வந்துள்ளது. கால்பந்து விளையாட்டை ஆதரிப்பது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது எனவும் ஐ.எஸ் ஆதரவு மத குருமார்கள் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.
பொது வீதியில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அந்த நால்வரும் பிரபல கால்பந்து அணியான அல்ஷபாபில் இணைந்து விளையாடி வருகின்றனர்.
குர்து இனத்தவருக்காக வேவு பார்ப்பதாக கூறி ஐ.எஸ் தீவிரவாதிகள் இவர்களை கடத்தி சென்றுள்ளனர். இதனிடையே கடத்தப்பட்ட கால்பந்து வீரர்களுடன் 5 பேரை படுகொலை செய்துள்ளதாக ஐ.எஸ் குழுவினரின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் படங்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரக்கா பகுதி ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்ததும் அனைத்துவகையான, கால்பந்து உள்ளிட்ட ஒருங்கிணைக்கப்படும் விளையாட்டுகளையும் தடை செய்திருந்தனர்.
மட்டுமின்றி கடந்த ஆண்டு ஆசியா கிண்ணம் கால்பந்து போட்டிகளை பார்த்துக்கொண்டிருந்த 13 இளைஞர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.