தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணவல பிரதேசத்தில இன்று (10) காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மற்றும் பாதையின் ஓரமாக சென்று கொண்டிருந்த இரு பெண்கள் இவ்வாறு பரிதாபகரமாக பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மஹியங்கணையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற காரில் அதன் சாரதிக்கு தூக்கம் ஏற்றப்பட்டதன் காரணமாக, கார் வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளதோடு, இரு பெண்கள் மீது மோதி, அருகிலிருந்த சுவர் ஒன்றிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பாரிய காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் இரு பெண்களும் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளனர்.
காரில் பயணித்த சாரதியும் மற்றுமொருவரும் காயமுற்று தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெல்தெனிய பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.