பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்புப்பேரணி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ , டீ.வீ.சானக பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 6 பேர் நேற்று மாலை ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்தனர்.
இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ , டீ.வீ. சானக , பிரசன்ன ரணவீர , உபாலி கெடிகார , சம்பத் அதுக்கோரள மற்றும் அஜீத் பிரசன்ன உள்ளிட்ட 6 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த 6 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.