அமீர்கான் தயாரிப்பில் தங்கல் புகழ் ஜைரா வாசிம் முன்னணி ரோலில் நடித்து, தீபாவளி ரிலீஸாக வெளிவந்த படம் சீக்ரெட் சூப்பர்ஸ்டார். இப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கியிருந்தார். விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற இப்படம் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை என்றாலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரூ.50 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், வெளியான நான்கு நாட்களில் ரூ.31.31 கோடி வசூலித்திருக்கிறது. இந்தவாரத்திற்குள் அசல் தொகையை வசூலித்து விடும் என்கிறார்கள்.