திமிர்த்தனமான நியு பிறவுன்ஸ்விக் டயமன்ட் திருட்டில் ரொறொன்ரோ தம்பதியர் கைது. தொடர்ந்து வெளிப்பட்டது குட்டு…
கனடா-செயின்ட் ஜோன்,நியு பவுன்லாந்.–ரொறொன்ரோ பகுதியை சேர்ந்த தம்பதியர் துணிச்சல் மிக்க நியு பிறவுன்ஸ்விக் டயமன்ட் திருட்டில் சம்பந்தப்பட்டடதாக கைது செய்யப்பட்டனர். இத்திருட்டு நாடு தழுவிய டயமன்ட் திருட்டு தொடருடன் சம்பந்தப்பட்டது.
வாஹன் ஒன்ராறியோவை சேர்ந்த 70-வயதுடைய கிரிகொரி சகரொவ மற்றும் 44-வயதுடைய நட்டாலியா வெல்ட்மன் இருவரும் திருட்டு குற்றங்களை எதிர்நோக்குகின்றனர்.
இருவரும் யோர்க் பிராந்திய பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குற்றங்கள் குறித்த விசாரனைக்காக நியு பிறவுன்ஸ்விக் மாகாணத்திற்கு அனுப்ப படுவர்.
இரு சந்தேக நபர்களும் வேறு பல அதிகார வரம்பிற்குரிய பகுதிகளிலும் இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என கூறப்படுகின்றது. பல பொலிஸ் பணிமனைகள் இவர்களின் நடவடிக்கைகளை ஒட்டு மொத்தமாக கண்காணிக்க முயன்று வருகின்றனர்.
இவர்கள் அக்டோபர் 7-ல் செயின் ஜோனில் W. Smith and Co. Fine Jewellers கடையிலும் திருட முயன்றுள்ளனர்.
கடைக்கு திருடர்கள் தாங்கள் தம்பதியர் என கூறிக்கொண்டு எத்தனை கரட் வாங்குவதென வாதாடியதாகவும் பின்னர் போலி ஒன்றை 10,000 டொலர்கள் பெறுமதி வாய்ந்த வைரத்துடன் மாற்றி திருடியுள்ளனர். விற்பனையாளர் தனது கவனத்தை திசை திருப்பிய சமயம் இந்த மாற்றம் நடந்துள்ளதாக கடை சொந்த காரர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றவாளிகளின் திருட்டை வெளிப்படுத்திய வீடியோ காட்சிகளை முதலில் வெளிப்படுத்திய முதல் ஆளான நியு பிறவுன்ஸ்விக் நகை கடை சொந்தகாரர் வின் சிமித் இதே போன்ற திருட்டுக்கள் சம்பந்தமாக கனடா பூராகவும் உள்ள மற்றய நகை கடை காரர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்.
ஒரு நிகழ்வு 70,000 டொலர்கள் பெறுமதியான வைரம் சம்பந்தப்பட்டது. மற்றொன்று வன்கூரில் 21,000 டொலர்கள் சம்பந்தப்பட்ட மாணிக்கம் திருட்டு சம்பந்தப்பட்டது.