நல்லத்தண்ணி, சிவனொளிபாதமலையில் சரிந்த குப்பை மேட்டை அகற்றும் பணியில் இன்று காலை முதல் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். சிவனொளிபாதமலையின் மாகிரிதம்ப எனும் பகுதியிலே கடந்த 18 ஆம் திகதி பகல் குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமையினால் சிவனொளிபாதமலைக்கு செல்லும் நடை பாதை சுமார் 15 மீட்டர் தூரம் வரை தடைப்பட்டது
பருவகாலத்தில் மலையுச்சிக்கு செல்லும் பாத யாத்திரிகளினால் எரியப்பட்ட பிளார்ஸ்ரிக் போத்தல்கள் உட்பட கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த குப்பை மேடே இவ்வாறு சரிந்துள்ளது .
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழையினால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாகவும் உடனடியாக அக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் சிவனொளிபதமலை நாயக்க தேரர் தெரிவித்திருந்த நிலையில் லக்ஷபான இராணுவீரர்களினால் கழிவுகளை அகற்றும் முதற்கட்ட பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது .