பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வரும் சோனம் கபூர், தற்போது அக்ஷ்ய் குமாரின் பேடுமேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அடுத்தப்படியாக இவர், நிகில் அத்வானி இயக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஸ்னோ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் கிரைம் கலந்த திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை கதையை சோனம் கபூரிடம் சொல்லிவிட்டார் இயக்குநர். அவருக்கும் கதை பிடித்து போய்விட்டது. ஆனால், இன்னும் உறுதி சொல்லாமல் இருக்கிறாராம். சமீபகாலமாக ஹீரோயின் தொடர்பான படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கு சோனம், நிச்சயம் இப்படத்தில் நடிப்பார் என்கிறார்கள்.