கடந்த 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற இவ்வருட உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும்விழாவில்
பல வருடங்களாக கனடா ஸ்ரீ வரசித்தி ஆலயத்தினை சிறந்த நிர்வாகத்தில் நடத்திவருபவர். கனடாவில் குறிப்பாக தமிழர்கள் செறிந்துவாழும் ரொறொண்டோ பெரும்பாகத்தில் முதன் முதலாக ஓர் கணேஷா ஆலயம் இல்லை என்ற குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் இந்த ஆலயத்தினை ஆரம்பித்தது மட்டுமல்லாமல் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக வருடாந்த மகோற்சவ விழாக்களை நடத்தி வருபவர். புலம்பெயர்ந்துவாழும் இந்த கனடா நாட்டிலே முதன் முதலாக இந்துமத குருக்கள் என்ற உயர்ந்த அந்தஸ்தில் தங்களது சமய இந்துமத செயற்பாடுகளை தலைமை தாங்கி ஆற்றிவருவதுடன் பல இந்து குருக்களை உருவாக்குவதில் தொடர்ச்சியாக அயராது உழைத்துவருபவர். கவின் கலை நிகழ்வுகளை அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நோக்குடன் ஆலயத்திற்கும் கவின் கலை நிகழ்வுகளுக்கும் தொடர்புகள் உண்டு என்பதினை நாங்கள் அறிந்திருந்தும் ஆலயத்தில் பல்வேறுவிதமான கவின் கலை நிகழ்வுகளை தமிழர்களின் கலை கலாச்சாரம் பண்பாடு மற்றும் நாகரிகம் ஆகியவற்றை அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நோக்குடன் விஷேட திருவிழா காலங்களில் உள்ளூர் கலைனர்களை அழைத்து அவர்களுக்குரிய சிறப்பான கௌரவங்களையும் வழங்கி கலைனர்களின் சிறப்பான அடையாளத்தினை உலகத்திற்கு வெளிக்காட்டிவருபவர். மேலாக கடந்த பத்து ஆண்டுகளாக கனடா ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக்கல்லூரியை நிறுவி அதன் பிரதம தலைமை அதிபராக கடமையாற்றிவருவதுடன் இன்றைக்கு 300 மாணவர்களை உள்வாங்கிய ஒரு பாடசாலையாக திகழ்ந்துவருவது அவர்களின் தலைமைத்துவத்தினை பறைசாற்றுகின்றது. இந்த கல்லூரியில் தமிழ், சமய, பண்ணிசை, வேதபாராயண போன்ற துறைகளை உருவாக்கி பல மாணவர்களை சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களாக உருவாக்கி வருவதில் தலைமைத்துவ ஆளுமையினை நிருபீத்துவருபவர். விசேடமாக கடந்த பத்து ஆண்டுகளாக பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் திறமைகளை தமிழ் மக்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்குடனும் மாணவர்களின் தேர்ச்சியினை வெளிக்கொணர்ந்து அவர்களுக்குரிய கௌரவ பட்டமளிப்பு விழாவினையும் நடத்தி தலைமைத்துவத்தில் மற்றவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ்ந்துவருபவர். வரசித்தி ஆலயத்தினை மிகவும் சிறப்பான நிர்வாகத்தில் நடத்தி வருவதோடு இந்து சமயத்தினை அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நோக்குடன் சமய சொற்பொழிவுகள், பிள்ளைகளுக்கான அறிவுரைகள், மாணவர்களை அரவணைத்து அவர்களின் சிறப்பான ஒழுக்கத்துடன் கூடிய கல்விக்கு தொடர்ச்சியாக சமுதாயத்தில் தலைமை தாங்கிவருபவர். இவ்வாறாக பல்வேறு செயற் திட்டங்களின் தலைமைத்துவ வித்தகராக திகழ்ந்துவரும் பெரு மதிற்புக்குரிய சிவஸ்ரீ விஜயகுமாரன் பஞ்சாட்சரஐயர் அவர்களுக்கு அதி உயர் விருதான தலைமைத்துவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது பாராடுதல்களுக்குரியதாகும். சிவஸ்ரீ விஜயகுமாரன் பஞ்சாட்சரஐயர் அவர்களின் சேவைகள் தொடர்ந்தும் வீறுநடை போட வாழ்த்துவதுடன் அவர்களின் பல்வேறுவிதமான செயல் திட்டங்கள் எவ்வித தடையும் இன்றி நிறைவேறி மாணவ சமுதாயத்திற்கு நன்மை பயர்க்க வேண்டுமெனவும் எல்லாம்வல்ல விநாயகப்பெருமானின் திருவருளும் ஆசியும் அவர்களுக்கு உண்டு எனவும் கூறி வாழ்த்தி வணங்குகின்றேன்.