ஒன்ராரியோவின் தன்டர் பேயில் கன மழை : வெள்ள அச்சம்.
ஒன்ராரியோவின் முக்கிய நகர்களில் ஒன்றான தன்டர் பேயில் கடுமையான மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. எனவே அங்கு வெள்ளம் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை அங்கு 92 மில்லிமீட்டர் அளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியதாகவும், கனமழையின் காரணமான தன்டர் பேயின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்ததாகவும் அந்நகரின் உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளுக்கான பொது மேலாளர் கெர்ரி மார்ஷால் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக அப்பகுதியின் போக்குவரத்தில் பாரிய சிக்கல் நிலவியதுடன், மக்கள் வெளியேற முடியாத ஒரு நிலைமை காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
மேலும் பல வீடுகளின் உள்ளே நீர் செல்ல ஆரம்பித்ததைத் தொடர்ந்து அம்மக்கள் நீரை வெளியெற்றும் பணிகள் ஈடுபட்டனர். கன மழையின் காரணமாக இவ்வாறான பெரும் துன்பங்களுக்கு அப்பகுதி மக்கள் முகம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலைமை தொடர்ந்து இடம்பெறுமாயின் தன்டர் பே பகுதியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.