ஏ.ஆர். ரகுமானுக்காக ஐப்பான் மாணவி செய்த செயல் – நெகிழ்ந்த ரகுமான்
ஏ.ஆர். ரகுமானுக்கு விருதுகள் வாங்குவது என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. அவரை கௌரவிக்கும் வகையில் பல நாடுகளில் இருந்து எல்லாம் விருதுகள் தருகின்றனர்.
அண்மையில் ரகுமான் ஜப்பான் நாட்டின் யோகோபோடியா என்ற அமைப்பு வழங்கும் ஃபுகுவோகா விருது வாங்க அங்கு சென்றிருந்தார்.
அப்போது அவரை வரவேற்ற ஒரு மாணவி, ரகுமான் அவர்களே வருக வருக, எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் எழுதப்பட்ட பலகை கொண்டு ரகுமானை வரவேற்றார். இதனை பார்த்து மகிழ்ச்சியடைந்த ரகுமான் அதை தன்னுடைய சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார்.