அபுதாபியில் இருந்து சிட்னி புறப்பட்ட எதிஹாட் விமானத்தில் புகை எச்சரிக்கை விளக்கு எரிந்ததால் அவசரமாக தரை இறக்கப்பட்டது. ஈ.ஒய் 450 விமானமானது அபுதாபியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது விமானத்தில் இருந்து புகை எழுவதற்கான எச்சரிக்கை விளக்கு எரிந்துள்ளது. இதைக் கண்ட விமான ஓட்டிகள், விமானத்தை அடிலெய்டு நகரில் அவசரமாக தரை இறக்கினர். 300க்கும் மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பு கருதி, அவசரகால வெளியேற்றங்கள் மூலம் இறக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தில் இருந்த பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்த பின்னரே எதிஹாட் விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.