நாட்டில் சுமார் 2 ஆயிரம் சட்டவிரோத துப்பாக்கிகள் காணப்படுவதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு சில பகுதிகளில் இயங்கும் பாதாள குழுக்களிடமும் வேறு சில குழுவினரிடமும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மைக்காலத்தில் கைப்பற்றப்பட்ட 700 துப்பாக்கிகள், அழிக்கப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக ஆயுதங்களைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விசேட செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.