இப்படி ஒருவரை பார்த்ததே இல்லை- முதன்முறையாக நயன்தாரா குறித்து பேசிய விக்னேஷ் சிவன்
நானும் ரவுடி தான் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்கு சமீபத்தில் நடந்து முடிந்த SIIMA விருது விழாவில் சிறந்த இயக்குனர் விருது இவருக்கு கிடைத்தது.
இந்த விருதை பெற்ற பின் இவர் பேசுகையில் ‘நயன்தாரா போல் ஒரு நடிகையை நான் பார்த்ததே இல்லை, அத்தனை அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் நடித்துக்கொடுத்தார்.
அவருக்கு என் நன்றி’ என கூறினார். விழா ஆரம்பம் முதல் முடிவு வரை இருவரும் ஒன்றாகவே அமர்ந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.