டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைப்பது குறித்து இந்தியாவின் செயப்பாடுகளை சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கைவிமர்ச்சித்துள்ளது. அந்த பத்திரிகையில் வெளியான கட்டுரையில்: டோக்லாம் எல்லையில் சீனா சாலை அமைப்பது ஒன்றும் புதிதாக துவங்கப்பட்ட திட்டம் இல்லை என்றும் பல ஆண்டுகளாக நடந்து வரும் பணி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை புரிந்து கொள்ளாமல் இந்தியா செயல்படுவது விசித்திரமாக உள்ளது என்றும் இந்திய சமுதாயத்திற்கு சித்தபிரமை பிடித்துள்ளது என்றும் அக்கட்டுரையில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் அதிருப்திக்கு சீனா பொறுப்பாக முடியாது என்றும் குறிப்பிடபத்துள்ளது.
டோக்லாம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சீன அரசால் கண்காணிக்கப்பட்டு வருகிறது அதனால் இங்கு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியது சீன அரசின் கடமை என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.