தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் இன்று அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மு.ப. 10 மணி தொடக்கம் பி.ப. 4 மணிவரை அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகின்றது. வவுனியாவில் தொடர் போராட்டம் நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தப் போராட்டதை நடத்துகின்றனர்.
அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, அந்தப் பிரச்சினையின் தீவிரத் தன்மையை அரசுக்கு உணர்த்துவதற்காக வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.