தற்போதைய அரசாங்கம் தோல்விக்கு அஞ்சித் தேர்தலை பிற்போட்டு வருவதாகக் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தெல்தெனிய பகுதியில் கட்சி ஆதரவாளர்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆதரவாளர்கள் விழிப்பூட்டல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தனவும் இங்குக் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது