அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர், வெஸ்லி மேத்யூஸ்; கேரளாவை பூர்வீகமாக உடைய இவர், பீஹாரைச் சேர்ந்த, ஷெரீன், 3, என்ற சிறுமியை, கடந்தாண்டு தத்தெடுத்து வளர்த்து வந்தார். ஷெரீன், உடல், மன வளர்ச்சி குறைந்த குழந்தை.கடந்த, ௭ல், ஷெரீன், பால் குடிக்க மறுத்ததால், வீட்டுக்கு வெளியே நிற்கும்படி, மேத்யூஸ் தெரிவித்தார்; வீட்டுக்கு வெளியே சென்ற, சிறுமி தொலைந்து போனாள்.
இந்த வழக்கில், மேத்யூசை போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்துள்ளனர். அவர் மீது சந்தேகம் நீடிக்கும் நிலையில், இரண்டு வாரங்களாகியும் சிறுமி, ஷெரீனை கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் , சிறுமி ஒருவரின் உடல் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மாயமான சிறுமியின் உடலா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மேத்யூஸ் போலீசாரிடம் சென்று வாக்குமூலம் அளித்துள்ளார். இது முந்தைய வாக்குமூலத்திற்கு முரணாக இருந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், அவர் என்ன வாக்குமூலம் அளித்தார் என்ற விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.