சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் அதிசிறந்த வீரருக்கான விருதை ரியல் மெட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரெனால்டோ வென்றார்.
ஆண்டின் ஆகச்சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதை ரியல் மெட்ரிட் அணியின் சினடின் சிடானி வென்றார்.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கல் விழா லண்டனில் கோலாகலமாக நடைபெற்றது.
நட்சத்திர வீரர்களான ரியல் மெட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ , பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் நெய்மர் ஆகியோரின் பெயர்கள் ஆண்டின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.
எனினும் கடந்த காலங்களில் ரியல் மெட்ரிட் அணியின் வெற்றியை பல போட்டிகளில் உறுதிப்படுத்திய நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரெனால்டோ ஆண்டின் மிகச்சிறந்த வீரர் விருதை வென்றார்.
அவர் இந்த விருதை வெல்லும் ஜந்தாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ஆண்டின் ஆகச்சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதை ரியல் மெட்ரிட் அணியின் சினடின் சிடானி வென்றார்.
ஆண்டின் மிகச்சிறந்த மகளிர் வீராங்கனையாக நெதர்லாந்து அணியின் லேகா மார்டின்ஸ் தெரிவானார்.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் வழங்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்றான புஸ்காஸ் விருதிற்காக கடுமையான போட்டி நிலவியிருந்தது.
என்றாலும் அந்த விருதை ஆர்சனல் அணியின் ஒலிவர் ஜீரோட் சுவீகரித்தார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கிறிஸ்டல் பெலஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிகச்சிறந்த கோலொன்றைப் போட்டமைக்காகவே புஸ்காஸ் விருது ஒலிவர் ஜீரோட்டுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.